ஊத்தங்கரை அருகே கிணற்றில் தவறிவிழுந்து பெண் உயிரிழப்பு.
ஊத்தங்கரை அருகே கிணற்றில் தவறிவிழுந்து பெண் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள உப்பாரப்பட்டி அடுத்த பாண்டவர் நகர்பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி விஜயா (55) இவருக்கு நீண்டகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் இதனால் அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 21-ம் தேதி அன்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரை பல்வேறு இடங்களிலில் தேடியும் அவர் இல்லை இந்நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விஜயாவின் சடலமாக மிதந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் உடலை மீட்டு விசாரணையில் இதில் விஜயா அந்த வழியாக சென்ற போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..