ஓசூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

ஓசூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை.;

Update: 2025-04-25 13:57 GMT
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து தமிழகத்திலும் முக்கிய சுற்றுலாத்தலங்கள், மாநில எல்லைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள், பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளின் பொருட்கள் ஆகியவற்றை மெட்டல் டிடெக்டர் மூலம் ரெயில்வே போலீசார் முழுமையாக சோதனை இட்டனர்.

Similar News