படுகொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு..*
படுகொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு..*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த 2021 ஆம் ஆண்டு பெண்களை கேலி செய்வதை பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது 30 இவர் கூலி தொழில் செய்து வருகிறார்.அதே பகுதியில் நடு தெருவைச் சேர்ந்தவர் லாரன்ஸ் வயது 23 இவர் அடிக்கடி முருகன் பகுதியை சேர்ந்த பெண்களை கேலி கிண்டல் செய்து வந்துள்ளார்.இதனை முருகன் தட்டிக் கேட்டுள்ளார்.இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முருகன் அவர் இருக்கும் பகுதியைச் சேர்ந்த சிலருடன் கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்திற்கு சென்று பெண்களை கேலி செய்யும் லாரன்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 24.08.21 அன்று இரவு முருகனின் வீட்டின் முன்பு அவரது மனைவி கவிதா மற்றும் அம்மா மனைவியின் தம்பி ராஜா ஆகியோர் இருந்துள்ளனர்.அவர்களது அருகில் முருகன் படுத்து தூங்கி கொண்டு இருந்துள்ளார்.அப்போது அங்கு மது போதையில் வந்த லாரன்ஸ் முருகனை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.தடுக்க வந்த ராஜாவிற்கும் காயம் ஏற்பட்டது.லாரன்ஸ் வெட்டியதில் படுகாயம் அடைந்த முருகனை உறவினர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் போது செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக இறந்த முருகனின் மனைவி கவிதா கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கொலை செய்த லாரன்ஸ் என்பவரை வலைவீசி தேடி பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பின் பினையில் அவர் வெளிவந்தார். இந்த கொலை வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் லாரன்ஸை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.