அடையாளம் தெரியாத மினி வேன் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பலி

விபத்து;

Update: 2025-04-25 16:26 GMT
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார். தஞ்சையை அடுத்த வயலூர் அருகே உள்ள சாரப்பள்ளத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் சத்தியராஜ் (வயது 38). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சத்தியராஜ் வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் விவசாய நிலத்திற்கு செல்வதற்காக புறப்பட்டார். தஞ்சை- கும்பகோணம் சாலையில் வயலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சத்தியராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் சத்தியராஜ் மீது மோதிய மினி லாரி நிற்காமல் சென்றுவிட்டது. இது குறித்து தஞ்சை தாலுகா காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சத்தியராஜின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வு பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, சத்தியராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மினி லாரியை தேடி வருகிறார்கள்.

Similar News