திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலில் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மேலப்பாளையத்தில் இஸ்லாமிய கல்வியகம் சார்பாக வெயிலினால் அவதி அடையும் பொதுமக்களுக்கு நேற்று நீர்,மோர்,தர்ப்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.