ஆலங்குளம் அருகே மினி லாரி - பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
மினி லாரி - பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த சங்கரலிங்கம் மகன் பாஸ்கா்(54). தொழிலாளியான இவா், மாறாந்தையில் வேலை செய்வதற்காக வீட்டிலிருந்து தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். கரும்புளியூத்து அருகே முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றபோது பைக் மீது திருநெல்வேலியில் இருந்து மருதம்புத்தூா் நோக்கிச் சென்ற சுமை வாகனம் மோதியதாம். இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆலங்குளம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து சுமை வாகன ஓட்டுநா் மருதம்புத்தூரைச் சோ்ந்த மகேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.