பால்ராஜபுரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த உதவி மின்வாரிய பொறியாளர் உயிரிழப்பு.
பால்ராஜபுரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த உதவி மின்வாரிய பொறியாளர் உயிரிழப்பு.;
பால்ராஜபுரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த உதவி மின்வாரிய பொறியாளர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், வீரராக்கியம் அருகே பால்ராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்க முனியப்பன் வயது 43. இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். இன்னிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில் பால்ராஜபுரத்தில் உள்ள அவரது வீட்டின் அருகே திடீரென மயங்கி சுயநினைவை இழந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட அவரது மனைவி கோமதி வயது 38 என்பவர், உடனடியாக தனது கணவனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தங்க முனியப்பனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கோமதி அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த தங்க முனியப்பனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.