ஜெகதாபி அருகே மது போதைக்கு அடிமையானவர், வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை.

ஜெகதாபி அருகே மது போதைக்கு அடிமையானவர், வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை.;

Update: 2025-04-26 08:36 GMT
ஜெகதாபி அருகே மது போதைக்கு அடிமையானவர், வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், ஜெகதாபி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கார்த்தி வயது 30. இவர் அண்மை காலமாக மது போதைக்கு அடிமையாகி வந்ததால், கடந்த ஒரு வருட காலமாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரக்தி மனப்பான்மையில் வாழ்ந்து வந்த கார்த்தி, ஏப்ரல் 25ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அறிந்த கார்த்தியின் தாயார் அஞ்சலை வயது 50 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த கார்த்தியின் உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News