திருநகரில் திடீரென காரை திறந்ததால் டூ வீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

திருநகரில் திடீரென காரை திறந்ததால் டூ வீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.;

Update: 2025-04-26 09:33 GMT
திருநகரில் திடீரென காரை திறந்ததால் டூ வீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, புள்ளா கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் வயது 43. இவரது எலக்ட்ரிக் டூவீலரில் ஏப்ரல் 23ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன கொங்கு மண்டபம் பின்புறம் உள்ள திருநகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் கரூர் சின்னாண்டங் கோவில் ரோடு பகுதியைச் சேர்ந்த சரண் வயது 32 என்பவர் அவரது ஹோண்டா சிட்டி காரை நிறுத்தி வைத்தவர், திடீரென காரின் கதவை திறந்தார். அப்போது அந்தப் பாதையை கடந்து சென்ற பழனிவேலின் டூவீலர், காரின் கதவில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த பழனிவேலை, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த பழனிவேலின் மனைவி மலர்கொடி வயது 40 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரின் கதவை போக்குவரத்து விதிகளுக்கு மாறாக திறந்து விபத்து ஏற்படுத்திய சரண் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News