பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி பகுதியில் உணவு சாப்பிடுவதற்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகன நிறுத்துமிடத்தில் உணவுகளை சாப்பிடுகின்றனா். பின்னா், அந்த பகுதிகளிலேயே உணவுகள், நெகிழிப் பொருள்களை வீசிச் செல்கின்றனர். இதனை வனவிலங்குகள் உட்கொள்ளும் நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.