குமரி : போதைக்கு எதிராக சைக்கிள் பவனி 

அஞ்சுகிராமம்;

Update: 2025-04-26 12:17 GMT
கன்னியாகுமரி அருகே  அஞ்சுகிராமம் ஊர் முன்னேற்ற சங்கம் சார்பில்  போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. போதை  பொருட்கள் பயன்பாட்டால் இளைய தலைமுறையினர் மிகவும் பாதிக்கபடுவதை விழிப்புணர்வு ஏற்படுத்த 150க்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணியாக சென்றனர். பேரணி  ஜேம்ஸ்டவுன், அழகப்பபுரம், மயிலாடி, வழக்கம்பாறை, பொற்றையடி, கொட்டாரம், மகராஜபுரம், வட்டக் கோட்டை வழியாக சுமார் 25 கிலோமீட்டர் தூரம்  கடந்து அஞ்சு கிராமம் வந்தடைந்தது.        பேரணியை அஞ்சுகிராமம் தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெஸீம், வஸீம் முன்னிலையில் தொழிலதிபர் ஆர்.எஸ்,பி, மணிவண்ணன் தொடங்கி வைத்தார். அஞ்சுகிராமம் போலீஸ் எஸ்.ஐ ஆறுமுகம், கன்னியாகுமரி சரக டி.எஸ்.பி மகேஷ்குமார் முடித்து வைத்தார்.       நிகழ்ச்சியில் ஊர் முன்னேற்ற சங்க தலைவர் ஹிட்லர், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சுதன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்கொடி, பால்ராஜ், செல்வராஜ், கணபதி,, ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் அருள்நேசன், பொருளாளர் ராஜலிங்கம், சமூக ஆர்வலர் டாக்டர் கார்டியா டேவிட் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணிக்கு மயிலாடி பேரூராட்சி கவுண்சிலர் பாபு, தலைவர் விஜயலெட்சுமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Similar News