போடி,ராசிங்காபுரம் பகுதியை சோ்ந்தவர் ராஜகுமாரி (50). இவா் கேரள மாநிலத்தில் தினமும் கூலி வேலைக்கு சென்று திரும்புவாா். நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றாா். இரவு இவரது கணவா் வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.2,000 திருடப்பட்டது தெரிய வந்தது. திருட்டு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.