தேனியை சோ்ந்த முருகன், பிரகாஷ் ஆகிய இருவரும் அப்பகுதியில் கேபிள் இணைப்பு கொடுத்து பராமரித்து வருகின்றனர். இவர்களுக்கும் சிந்தாமணி என்பவருக்கும் கேபிள் இணைப்பு வழங்குவது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக சிந்தாமணி, அவரது நண்பர் சோனைமுத்து ஆகியோர் சேர்ந்து முருகன், பிரகாஷை அரிவாளால் வெட்டியுள்ளனர். இது குறித்த புகாரில் போலீசார் சிந்தாமணியை (ஏப்.25) கைது செய்தனர்.