அணைக்கரைப்பட்டியில் பயன்பாடு இன்றி காணப்படும் மின் வாரிய குடியிருப்புகள்
நடவடிக்கை;
போடி அருகே அணைக்கரைப்பட்டியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு பணிபுரியும் உதவி மின் பொறியாளர், பணியாளர்களுக்காக பல லட்சம் மதிப்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அவற்றில் சிலர் மட்டுமே குடியிருந்து வரும் நிலையில் சில கட்டிடங்கள் சேதம் அடைந்த நிலையில் புதர் மண்டி காணப்படுகின்றது. அவற்றை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மின்வாரிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.