பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திண்டுக்கல்லில் அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2025-04-26 12:33 GMT
ஜம்மு காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாநகரச் செயலா் அரபு முகமது தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் என். பாண்டி, மாவட்டச் செயலா் கே. பிரபாகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். அப்போது, உயிரிழந்தவா்களுக்காக மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Similar News