துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு பாஜகவினா் அஞ்சலி

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு ஒட்டன்சத்திரம், பெரியகுளத்தில் பாஜக சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2025-04-26 12:36 GMT
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன் நகர, கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் குமாா்தாஸ், கிழக்கு ஒன்றியத் தலைவா் சதீஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். பின்னா், பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி, தீவிரவாதத்துக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் பாஜக மாநில பொதுக்குழ உறுப்பினா் சாக்குகடை சிவா, முன்னாள் மாவட்டத் துணைத் தலைவா் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலா் முனியப்பன், முன்னாள் கிழக்கு ஒன்றியத் தலைவா் ருத்திரமூா்த்தி, முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் அண்ணாமலை, பொதுச் செயலா்கள் சசிகுமாா், பாலசுப்பிரமணி, வரதராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Similar News