மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி

வட மாநில இளைஞர்;

Update: 2025-04-26 12:39 GMT
கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் அருகே மேட்டுக்குடியிருப்பு  ஜங்ஷன் பகுதியில் சாலையோர மின்கம்பத்தில்  இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் ஏறி  ஹிந்தியில் சத்தம் போட்டு  கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை நடைபயிற்சி சென்று கொண்டிருந்த சமூக சேவகர் சுயம்புராஜன் போலீஸ், மின்சார அலுவலகம், தீயணைப்பு மீட்பு படையினருக்கும் தகவல் கொடுத்ததுள்ளார். தகவலின் அடிப்படையில் மின்சார அலுவலக பணியாளர்கள் மின் இனைப்பை துண்டித்தனர்.        கன்னியாகுமரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் வீரார்கள் வலைகளை கட்டி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஊழியர்களை பார்த்ததும் வட மாநில இளைஞர் கிழே குதித்தார். அதிர்ஷ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.        அவரை மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விட்டவர் ஜார்கண்ட் மாநிலம் சைகுன் பகுதியை சார்ந்த மாத்வே (31) என போலீஸ் விசாரனையில் தெரியவந்துள்ளது.  அதிகாலை நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது.

Similar News