குமரி மாவட்டம் காட்டுப்புதூர் அருகே உள்ள வாழ மார்த்தாண்ட புரத்தை சேர்ந்தவர் செல்லதுரை (40) கொத்தனார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் சரியில்லாமல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சென்றுள்ளார். அங்கு பரிசோதனை முடிந்து மருந்து வாங்கிவிட்டு பஸ் ஏறுவதற்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி பின்புறம் பகுதி உள்ள பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த தம்மத்து கோணம் பகுதியைச் சேர்ந்த விஜி. (20) என்பவர் செல்லத்துரை மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த செல்லத்துரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த செல்லத்துரை இன்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.