உலக இஷின் ரியு பவர் டிராகன் கராத்தே அமைப்பின் சார்பில் கராத்தே பயிற்சியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கராத்தே தேர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கன்னியாகுமரி மாவட்டம், சாந்தபுரம் அருகே உள்ள ராம் பேட்மிட்டன் அகாடமியில் வைத்து நடைபெற்றது. மாணவர்களுக்கான கராத்தே தேர்வை கேரள பயிற்சியாளர் ஷீகான் ஜோய் ஜெயகுமார் நடத்தினார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கராத்தே தகுதி பெல்ட்களை உலக இஷின் ரியு பவர் டிராகன் கராத்தே அமைப்பின் இயக்குனர் கராத்தே ஜெய கர்ணன் , வழங்கினார். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர் ராம் பேட்மிண்டன் அகாடமி இயக்குனர் ரமேஷ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நவஜோதி பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை திருமதி அரசி, களரி ஆசான்கள் அருள், அஜோய்,மகேஷ், சமூக சேவகர் குளச்சல் சபீர், அபுதாஹிர் மற்றும் லெட்சுமிபுரம் நவ ஜோதி பள்ளியின் ஆசிரியைகள், தக்கலை தேவி பள்ளியின் ஆசிரியைகள் மாணவ மாணவிகளின் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்