குமரி மாவட்டத்தில் உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் நாகர்கோவிலில் வைத்து மாவட்ட கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் மரு. ஆர். இராதாகிருஷ்ணன் தலைமையில் கால்நடை மருத்துவர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. ஆர் . ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் மாவட்டத்தில் சிறந்த கால்நடை மருத்துவ நிலையமாக நாகர்கோவில் கால்நடை பன்முக மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருது மரு. சந்திரசேகரிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய , மரு. லெட்சுமிஶ்ரீ , மரு. பரமேஸ்வரன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி இயக்குநர்கள் எட்வர்ட் தாமஸ் , சந்திரசேகர் , முகமது இஸ்மாயில் , சுப்பிரமணியன் , பொன்மணி , அனைத்து கால்நடை உதவி மருத்துவர்கள் ஓய்வு பெற்ற கால்நடை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவினை கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் மரு. இரமேஷ் , மரு. அருள் பிரசாத் மற்றும் மரு. லெட்சுமிஶ்ரீ சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.