குமாரபாளையத்தை சேர்ந்த சமூக சேவகிக்கு விருது வழங்கினர்
வாகை தொண்டு நிறுவனம் குமாரபாளையத்தை சேர்ந்த சமூக சேவகிக்கு விருது வழங்கினர்;
சேவை செய்யும் மகளிர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா வாகை தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தது. நிறுவனர் சிவரஞ்சன் தலைமை வகித்தார். ரத்த தேவைக்கு உதவுதல், உடல் உறுப்பு தானம் பெற வைத்தல், கண் தானம் செய்தல், ஆதார், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல், பெயர் திருத்தும் செய்ய உதவுதல், மருத்துவ காப்பீடு மூலம் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய உதவுதல்,வடிகால் பராமரிப்பு சாலை வசதி மேம்படுத்துதல், பேருந்துகள் இல்லாத பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்து வரும் குமாரபாளையம் சமூக ஆர்வலர் சித்ராவின் சேவையை பாராட்டி விருது வழங்கி, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். நடிகர் அனுமோகன் உள்ளிட்ட பலர் பாராட்டி பேசினார்கள்.