கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் அளித்த குற்றச்சாட்டுகள் மீது வெகு நாட்களாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீதுநடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு மனு நாள் கன்னியாகுமாரி தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சுசீந்திரம் -17, பள்ளம்7, கன்னியாகுமரி16, அஞ்சு கிராமம்17, ராஜாக்கமங்கலம் 18, ஈத்தாமொழி9 ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து 101 மனுக்களை நேரடியாக கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டன. இதில் கன்னியாகுமரி, சுசீந்திரம், பள்ளம், ராஜாக்கமங்கலம், அஞ்சு கிராமம், ஈத்தாமொழி காவல் ஆய்வாளர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்பு மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து உடனடி விசாரணை நடத்தி பெறப்பட்ட 101 மனுக்களில் 80 மனுக்களுக்கு உடனடி தீர்வு ஏற்பட்டது. ஒரே நாளில் 80 மனுக்களை விசாரித்து தீர்வு கண்டதில் மகிழ்ச்சி அடைந்தனர்.