போலீசாருக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை

எஸ் பி தொடங்கி வைத்தார்;

Update: 2025-04-27 00:32 GMT
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. இரா. ஸ்டாலினிடம் பல போலீசார் விரிசுருள் சிரை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தனர்.  அதன் அடிப்படையில் மாவட்ட முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது . அவர்களுக்கு மாவட்ட ஆயுதப்படையில் வைத்து மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நேற்று இதில் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது .  இந்த சிறப்பு முகாமில் மாவட்டத்தில் உள்ள 91 காவலர்களுக்கு இப்பிரச்சினை கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட போலீசாருக்கு சுருக்கு வெரிகோஸ் வெயின் காலுறைகள் வழங்கப்பட்டது.  மேலும் 450 காவலர்கள் மற்றும் அதிகாரிகள் நடைபெற்ற சிறப்பு முகாமில் உடல் பரிசோதனை மேற்கொண்டனர். நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை பரிசோதனைகள், ரத்தப் பரிசோதனை, பிரஷர் பரிசோதனை, இதய பரிசோதனை, தோல் சம்பந்தமான பரிசோதனை, பல் பரிசோதனை, குழந்தைகளுக்கான பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, எலும்பு பரிசோதனை, வயிறு சம்பந்தமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவைப்படுபவருக்கு ஸ்கேன் பரிசோதனை போன்றவைகள் செய்யப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.      இதில் பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் சுமார் 32 பேர் கலந்து கொண்டு சிகிட்சையளித்தனர்.

Similar News