மணல் நிறுவனத்தில் தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு

மணவாளக்குறிச்சி;

Update: 2025-04-27 00:36 GMT
மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் ஐ ஆர் இ எல் மணல் ஆலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு குமரி மாவட்ட தோதோட்டக்கலைத் துறையின் இணை இயக்குனர் ஷீலா ஜான் மற்றும் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இன்று வருகை தந்தனர். அவர்களுக்கு ஐ ஆர் இ எல் நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் முதன்மை பொது மேலாளர் மற்றும் ஆலை தலைவர் செல்வராஜன் ஆலையின் செயல்பாடு குறித்து விளக்கி கூறினார். தொடர்ந்து தோட்டக்கலைத் துறையினர் ஆலையின் செயல்பாடு மற்றும் கனிம மணல் எடுப்பது குறித்து கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். பின்னர் அவர்கள் ஆலை செயல்பாடுகளை நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டனர். இதை அடுத்து அவர்கள் ஐ ஆர் இ எல் நிறுவனம் மணல் எடுத்த பகுதிகளில் கதிர்வீச்சின் அளவு குறைந்துள்ளதை கதிர்வீச்சு அளவீட்டு கருவிகள் மூலம் தெரிந்து கொண்டனர். மேலும் அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு காய் பலன் கொடுப்பதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்த அவர்கள் கூறுகையில், ஐ ஆர் இ எல் இயற்கை கதிர்வீச்சின் அளவை தாது மணல் எடுப்பதன் மூலம் குறைகிறது என்பதை அறிந்து கொண்டோம் என்றனர்.

Similar News