பூதப்பாண்டியில் பூத்துக்குலுங்கும் பூ மருது பூக்கள் 

கன்னியாகுமரி;

Update: 2025-04-27 00:43 GMT
குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பூதலிங்கம் சுவாமி கோயில் முன்புறம் தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில் முன்புறம் பூமருது மரத்தின் பூக்கள் கொத்துக்கொத்தாக புதுவகை சிவப்பு நிறத்தில் பூத்து குலுங்குகிறது. இது சிவப்பு நிற  பூக்களை பார்ப்போரை வியக்கவும் பார்க்காதவரை பார்க்க அழைக்கவும் செய்கிறது. பூக்களின் அழகிகள் என வர்ணிக்கப்படும் சித்திரை மாத சரக்கொன்றை மலர், மஞ்சள் மயில் கொற்றைப்பூ, செம்மயிர் கொன்றை புஷ்பம் ஆகியவத்தின் அழகை தோற்கடித்து மரங்களின் மலர்களில் பேரரசியாக பேரழகியாக அலங்காரமாக காட்சியளிக்கிறது இந்த பூ.  தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டும் இது காணப்படுகிறது. இந்த மரத்தை வனத்துறை, தோட்டக்கலைத்துறை, கல்லூரிகளின் தாவரவியல் துறை ஆகியவை இதன் கன்றுகளை சாலையோரம், நீர்நிலை ஓரம், அரசு வளாகங்கள், தொழிற்சாலை வளாகங்கள், கட்டிட காடுகளில் நட்டு பராமரித்து தமிழ்நாட்டை மனம் மகிழும் பூஞ்சோலையாக்கிட வேண்டுமென மக்கள் திட்டமிட்டுள்ளதாக சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளனர்.

Similar News