தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில அமைப்பு சார்பில்நல நலவாழ்வு உரிமையை சட்டமாக நிறைவேற்ற கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் நீதிமன்றத்தால் செயல்படுத்தக்கூடிய நல வாழ்வு உரிமையை உத்திரவாதம் செய்யவில்லை. அரசியலமைப்பின் 21 வது பிரிவு தரமான வாழ்க்கை என்றால் என்ன என்பதை தெளிவுபடுத்தவில்லை. ஆதலால் நல வாழ்வு உரிமைச் சட்டம் என்பது உடனடியாக நமக்குத் தேவைப்படுகிறது. அது அடிப்படை உரிமை சட்டமாக மாற்றப்பட வேண்டும் என்பதை நாம் மாநில மற்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படது. அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பேராசிரியர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஜெனிதா அனைவரையும் வரவேற்றார். கௌரவத் தலைவர் செலின் மேரி தொடக்க உரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் டோமினிக்ராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.