கன்னியாகுமரி அருகே தாமரை குளம் பதியில் சித்திரை திருவிழா கடந்த 18 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 8 ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் மாலை 8 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிவலம் வந்து இரவு 10 மணிக்கு பதி முன்பு கலிவேட்டை நடந்தது.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11ம்நாள் திருவிழாவான (28ம் தேதி) நாளை தேரோட்டம் நடக்கிறது. அதிகாலை 5.30மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, 6 மணிக்கு உகப்பாட்டு, காலை 9:30 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. பகல் 12:30 மணிக்கு சமபந்தி விருந்தும், மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை ,மாலை 6.30 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் பதிவலம் வருதல், இரவு 8 மணிக்கு அன்ன தர்மம் நடக்கிறது.