போக்சோ வழக்கு குற்றவாளிக்கு   குண்டாஸ்  

கிள்ளியூர்;

Update: 2025-04-27 03:36 GMT
கிள்ளியூர், அடைகாக்குழி  பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் சுஜின்குமார்  (31). இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மார்த்தாண்டம் மகளிர் போலீசாரால்  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.        அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டாலின் மாவட்ட ஆட்சித் தலைவர்  அழகு மீனாவுக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று சுஜின் குமாரை  போக்சோ குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.       இதையடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார்,  உத்தரவின் படி போக்சோ குற்றவாளி சுஜின்குமாரை .  பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News