தோப்பில் மாடு மேய்த்த பெண் மீது தாக்குதல்

மணவாளக்குறிச்சி;

Update: 2025-04-27 03:39 GMT
மணவாளக்குறிச்சி அருகே கல்படி பகுதியை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் மனைவி தமிழரசி (56) இவர்கள் பசுமாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் இருவரும் அருகிலுள்ள தென்னை தோப்புகளில் தங்கள் பசு மாடுகளை கட்டி மேய்த்து வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று அப்பகுதி சேர்ந்த ஜெகன் (44) என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்த தோப்பில் தமிழரசி தனது மாடுகளை மேயவிட்டுள்ளார்.       அப்போது அங்கு வந்த ஜெகன் பசுமாடுகளை மேய்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்தவர் தமிழரசியை தாக்கியுள்ளார். இதில் அவர் அங்கே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து ஜெகன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். நீண்ட நேரமாக  தமிழரசி வீடு திரும்பாமல் மருமகள் சரண்யா தேடிச் சென்றபோது, தோப்பில் தமிழரசி மயங்கி கிடப்பதை கண்டு அவர் உடனடியாக தனது கணவர் கோபிக்கு தகவல் தெரிவித்தார்.        இதை அடுத்து கோபி மற்றும் உறவினர்கள் வந்து தமிழரசியை  வெள்ளிசந்தையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருக்கிறது. மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News