மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி
தக்சஷீலா பள்ளியில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி தேர்வில் சிறுவர் சிறுமியர் ஆர்வமுடன் பங்கேற்பு;
திண்டுக்கல் தக்சஷீலா பள்ளியில் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பாட்ட போட்டிகள் மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றன. திண்டுக்கல் பழனி கொடைக்கானல் நிலக்கோட்டை ஒட்டன்சத்திரம் வடமதுரை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒற்றை கம்பு ,இரட்டை கம்பு, சுருள்வாள், தொடு முறை ஆகிய போட்டிகள் நடைபெற்றன. பள்ளி இயக்குனர் டாக்டர் அனிதா ராமநாதன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். 10 வயதுக்கு கீழ், 14 வயதுக்கு கீழ், 17 வயதுக்கு கீழ், 19 வயதுக்கு கீழ் 30 வயதில் என ஆண் பெண் போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன இதில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு முதல் மூன்று பரிசுகளாக தங்கம் வெள்ளி வெண்கல பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதன் முதலிடம் பிடித்த வீர வீராங்கனைகள் வரும் மே மாதம் ஏற்காட்டில் நடைபெறும் மாநில போட்டிகளில் தகுதி பெற்று பங்கேற்பார்கள். மாவட்ட செயலாளர் செந்தில் மாவட்ட பொருளாளர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பயிற்சியாளர்கள், நடுவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் வீரர் வீராங்கனைகள் பலர் போட்டிகளை கண்டு ரசித்தனர்.