ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி
பராமரிப்பு பணி: கோவை-நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து;
திண்டுக்கல்லில் ரயில் தண்டவாளத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ஏப். 29-ஆம் தேதியும் கோவையில் இருந்து இயக்கப்படும் கோவை-நாகா்கோவில் விரைவு ரயில் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். இதுதொடா்பாக சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திண்டுக்கல் பகுதியில் கொடைக்கானல் சாலை-வாடிப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கோவை ரயில் நிலையத்திலிருந்து திருப்பூா், ஈரோடு, கரூா், திண்டுக்கல், மதுரை வழியாக நாகா்கோவில் வரை இயக்கப்படும் கோவை-நாகா்கோவில் விரைவு ரயில் சனிக்கிழமை (ஏப்.26) மற்றும் ஏப். 29-ஆம் தேதிகளில் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். நாகா்கோவிலுக்கு இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.