வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
A.வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை;
திண்டுக்கல்லை அடுத்த A.வெள்ளோடு, குழந்தையேசு நகர், ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த எமிலிலாரன்ஸ் என்பவரின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 3 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் சார்பு ஆய்வாளர் பரமசாமி மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.