திருவேங்கடத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியினர் நீர் மோர் பந்தல் திறப்பு
தமிழக வெற்றி கழகம் கட்சியினர் நீர் மோர் பந்தல் திறப்பு;
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பொது மக்களுக்கு சங்கரன்கோவில் சாலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் இன்று நீர் மோர் பந்தலை திறப்பு விழா நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் குருவிகுளம் துணை வடக்கு ஒன்றிய செயலாளர் சைக்ராஜ், திருவேங்கட பேரூர் கழகச் செயலாளர் காளிராஜ். துணைச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தமிழக வெற்றி கழக கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.