கீழப்பாவூரில் தட்டுப்பாட்டின்றி குடிநீர் விநியோகம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
தட்டுப்பாட்டின்றி குடிநீர் விநியோகம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பெத்த நாடார்பட்டி ஊராட்சிசண்முகபுரத்தில் சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் பொது மக்கள் தண்ணீரை தேடி அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைத்திட ஊராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.