திண்டுக்கல்லில் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி
வரலாற்றிலிருந்து ஒரு பாடத்தை கூட கற்றுக் கொள்ளாத நாடு பாகிஸ்தான். தற்போது நடந்த தீவிரவாத செயலுக்கு பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்படும் - மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் திண்டுக்கல்லில்பேட்டி;
திண்டுக்கல்லில் ஸ்ரீ அபிராமி அம்மன் பக்தர் குழு நடத்தும் ஆன்மீக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மகராஷ்டிரா மாநில கவர்னர் சி பி ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கிடம் அளித்த பேட்டியில், கவர்னர் அரசியல் பேசக்கூடாது என கூறிவிட்டு அரசியல் கேள்வியாகவே கேட்பீர்கள். காஷ்மீர் தாக்குதல் சம்பந்தமாக திருமாவளவன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு என்ன செய்யலாம் என திருமாவளவன் அவர்களிடம் கேளுங்கள். தீவிரவாதிகள் நமது மக்களைக் கொன்று குவிக்கிறார்கள். மனைவியின் கண் முன்னே கணவர்கள் கொல்லப்படுகின்றனர். யாரெல்லாம் திண்டுக்கல் மலை கோட்டை மீது சென்று இருக்கிறார்களோ? அவர்களுக்கு எல்லாம் புரியும். இந்து தெய்வங்களை வைப்பது தான் நியாயம், தர்மம், நீதி என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்கு யாரும் பெரிய சான்றுகளை தேடி அலைய வேண்டியது இல்லை. அபிராமி அம்மன் சிலை மலைக்கோட்டை மீது வைக்கப்பட வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. இதுகுறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தல் என்பதை நாங்கள் நிச்சயமாக செய்வோம். ஜனநாயகத்தில் சட்டத்தை நம் கையில் எடுத்துக் கொள்வது என்பது சரியாக இருக்காது. சட்டத்திற்கு உட்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார்.