பாஜக சார்பில் ஜம்மு காஷ்மீரில் சுட்டு கொல்லபட்ட மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி

ஜம்மு காஷ்மீரில் சுட்டு கொல்லபட்ட மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி;

Update: 2025-04-28 09:40 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சண்முகநல்லூரில் பாஜக சார்பில் கஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டு கொள்ளப்பட்ட பொது மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சண்முகநல்லூரில் கிளை தலைவர் சுப்பிரமணியன் குருக்கள் பட்டி கிளை தலைவர் மாடசாமி, ராமசந்திரன் ஆகியோர் தலைமையில், மேலநீலிநல்லூர் மண்டல் தலைவர் பரமசிவன், குமார் முன்னிலையில் ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவதிகளால் சுட்டு கொல்லப்பட்ட 28 இந்து சொந்தங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் புலிக்குட்டி பொதுச் செயலாளர்கள் முத்துப்பாண்டி சீனிவாசன் மற்றும் வடிவேல் முருகையா, மாவட்ட துணை தலைவர் நந்துஷ்வரன் மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், கலையரசி செந்தூர்பாண்டியன், ரமேஷ், சஞ்சய் முத்துசாமி, வேல்முருகன், முத்து சாமி, ராமசந்திரன், உலகநாதன், சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான பாஜக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News