ஓடை மண் அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டு;
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட பாட்டபத்து மற்றும் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் இன்று (ஏப்ரல் 28) ஓடை மண் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியில் தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை மேற்கொண்ட 23வது வார்டு கவுன்சிலர் அப்துல் சுபுஹானிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.