தொண்டு காளிபாளையம் காலனியில் டூவீலர்கள் மோதல். வடமாநில தொழிலாளி படுகாயம்.
தொண்டு காளிபாளையம் காலனியில் டூவீலர்கள் மோதல். வடமாநில தொழிலாளி படுகாயம்.;
தொண்டு காளிபாளையம் காலனியில் டூவீலர்கள் மோதல். வடமாநில தொழிலாளி படுகாயம். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பூரிஹரிஜன் வயது 27. இவர் கரூர் மாவட்டம், தென்னிலை அருகே கோடந்தூரில் செயல்படும் கே ஆர் கே கிரசர் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் தேதி இரவு 7 மணி அளவில், தொண்டுகாளி பாளையம்- கோடாந்தூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் தொண்டு காளிபாளையம் காலனி அருகே சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் வயது 27 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், பூரி ஹரிஜன் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கே ஆர் கே கிரஷர் நிறுவனத்தின் மேலாளர் கார்த்திகேயன் வயது 27 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அஜித்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்