அரியலூரில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

அரியலூரில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-05-15 10:36 GMT
அரியலூர்,மே 15- சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு}2025 திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில் கல்லூரி கனவு}2025, உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா தலைமை வகித்து, உயர்கல்வி முக்கியத்துவம் குறித்து பேசினார். பேராசிரியர்கள், வங்கி மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள் குறித்தும் பேசினர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1000}க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி கனவு திட்டத்தின் கீழ் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் குறித்த உயர்கல்வி வழிகாட்டு கையேடு வழங்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவானந்தன் வரவேற்றார்.

Similar News