அரியலூர் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி இரண்டாவது திருமணம் செய்த கூலி தொழிலாளி கைது.
அரியலூர் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி இரண்டாவது திருமணம் செய்த கூலி தொழிலாளி கைது செய்தனர்.;
அரியலூர், மே.15- அரியலூர் மாவட்டம் கீழகோவிந்தபுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபு (46) கூலி தொழிலாளி இவருக்கும் வளவெட்டி குப்பத்தைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அடிக்கடி பிரபு அனிதாவிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.மேலும் கீழ கோவிந்தபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு அனிதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் அனிதா ஒன்பது மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது இதுகுறித்து முதல் மனைவி அனிதா கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து பிரபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.