கன்னியாகுமரியில் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், குமரி மாவட்ட திருக்கோவல்களினஅறங்காவலர்குழுதலைவர் பிரபா ராமகிருஷ்ணன், ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு தீபம் ஏற்றிவைத்தனர்.