திசையன்விளையில் அகில இந்திய மின்னொளி கபாடி போட்டி தொடக்கம்
அகில இந்திய மின்னொளி கபாடி போட்டி தொடக்கம்;
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் அகில இந்திய மின்னொளி கபாடி போட்டி நேற்று (மே 15) தொடங்கியது. இந்த போட்டிகள் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் மகராஷ்டிரா, அரியானா, பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்துள்ளார்.முதல் நாள் போட்டியில் டெல்லி அணியும் வேலூர் அணிகளும் மோதியது.