நெற்றியில் நாமம் இட்டு மடிப் பிச்சை கேட்கும் போராட்டம்
மதுரையில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் மடிப்பிச்சை கேட்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.;
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (மே.16) காலை சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் கூட்டமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நெற்றியில் நாமம் இட்டு, மடிப்பிச்சை கேட்கும் போராட்டத்தை நடத்தினார்கள். இப்போராட்டத்தில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி பென்சன் வழங்க வேண்டும், பென்சன் திட்டத்தை திருத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மடிப்பிச்சை எடுக்கும் போராட்டத்தில் நடத்தினார்கள். இதில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.