சங்கரன்கோவிலில் ஜோதி ஓட்டம் நிகழ்ச்சியை இன்று நடைபெற்றது
ஜோதி ஓட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு ஜோதி ஓட்டத்தை நெல்லை விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல துணை நெறியாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் இன்று காலையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சி குருவிகுளம் அம்பேத்கர் சிலை முன்பு ஜோதி தீபம் நிறைவு பெற்றது. தென்காசி மண்டல துணைச் செயலாளர் குழந்தை வள்ளுவன், சங்கரன்கோவில் துணை தொகுதி செயலாளர் ஜெரால்ட், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், இளங்கோ, கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.