திருநெல்வேலி மாவட்டம் மானூர் குறிச்சிகுளம் பிரிமியர் லீக் சார்பாக 11ஆம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா துவக்க நிகழ்ச்சி இன்று (மே16) காலை குறிச்சிகுளம் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் ஜமாத் தலைவர் மிர்ஷா, பொருளாளர் தாஜ்தீன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அன்வர்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு ஜெர்ஸி, கிரிக்கெட் பேட்,பால் உள்ளிட்டவற்றை வழங்கினர்.