ஏற்காட்டில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

போலீசார் விசாரணை;

Update: 2025-05-16 10:36 GMT
ஏற்காடு முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிலிப் குமார். இவருடைய மகன் பிரமோத்குமார் (வயது 31). ஆட்டோ டிரைவரான இவர், நான்கு சக்கர வாகன மெக்கானிக்காகவும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 3 வயதில் மகளும், 1½ வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரமோத்குமார் கடந்த சில நாட்களாக மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏற்காடு படகு இல்ல சாலை பகுதியில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் ஆட்கள் யாருமில்லாத நேரத்தில் கார் பார்க்கிங் ஓரத்தில் அமைந்துள்ள இரும்பு தூணில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் அந்த பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள், தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News