தோட்டப்பாளையத்தில் சதுர்த்தி விழா!
ஸ்ரீ செல்வ கணபதி கோயிலில் செல்வ கணபதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ கணபதி கோயிலில் செல்வ கணபதிக்கு சீயக்காய், மஞ்சள், பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகருக்கு பிடித்த உணவுகளை கொண்டு வந்த அங்கு வந்த பக்தர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.