தேசிய டெங்கு தின விழிப்புணர்வு
தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நடைபெற்றது.;
அரியலூர்,மே 17 - தேசிய டெங்கு தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த பாரத ஸ்டேட் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பொது சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அம்மையத்தின் இயக்குநர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, பகலில் கடிக்கும் கொசு நன்னீரில் மட்டுமே வளரும். காய்ச்சல் கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார். மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் வகீல், தொற்றா நோய்கள், மக்களைத் தேடி மருத்துவம், புகையிலை மற்றும்போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.பின்னர் அனைவரும் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கீழப்பழூர் சுகாதார ஆய்வாளர் நரேந்திரன் செய்திருந்தார். படவிளக்கம்: கீழப்பழுவூர், திடீர்குப்பத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் வகீல்.