புளியங்குடியில் மின்னணு சாதன கிடங்கில் தீவிபத்து
மின்னணு சாதன கிடங்கில் தீவிபத்து;
தென்காசி மாவட்டம் புளியங்குடி கீழ பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சிராஜுதீன் மகன் செய்யதலி (40). அவா் பழைய பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி ஆகியவற்றை மொத்தமாக கொள்முதல் செய்து, அதை சீரமைத்து விற்கும் தொழில் செய்து வருகிறாா். கொள்முதல் செய்யப்பட்ட, சரி செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை புளியங்குடி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகேயுள்ள கிடங்கில் வைத்துள்ளாா். நள்ளிரவு அந்தக் கிடங்கில் திடீரென தீவிபத்து நேரிட்டதாம். தகவலின்பேரில், வாசுதேவநல்லூா், கடையநல்லூா் தீயணைப்புத் துறையினா் சென்று சில மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், தீயை அணைத்தனா். இதில், சில லட்ச ரூபாய் மதிப்பிலான சாதனங்கள் சேதமடைந்தனவாம். புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன், ஆய்வாளா் ஷியாம்சுந்தா் ஆகியோா் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.