கும்மிடிப்பூண்டி அருகே கோவில் திருவிழாவிற்கு வரி வாங்க மறுப்பு காதலித்து திருமணம் செய்ததால் கிராமத்தை விட்டு ஒத்திக்கி வைத்தனர்
சார் ஆட்சியர் பேச்சி வார்த்தை நடத்தியும் தீர்வு இல்லை;
கும்மிடிப்பூண்டி அருகே கோவில் திருவிழாவிற்கு வரி வாங்க மறுப்பு சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சனைக்கு தீர்வு இல்லை விழாவில் பங்கேற்க விடாமல் ஒதுக்கி வைப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் திருவள்ளூர் மாவட்டம் பெரிய ஓபுலாபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பிடாரி செல்லியம்மன் கோவில் திருவிழாவில் 10க்கும் மேற்பட்டவர்களிடம் முறையாக வரி வசூல் செய்யாமல் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்பிடம் புகார் அளித்த நிலையில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அனைவரிடம் வரி வாங்கி திருவிழாவில் அனைவரையும் சரிசமமாக நடத்துவோம் என உறுதி அளித்த விழா நடத்தும் குழுவினர் அதனை செயல்படுத்தாமல் தங்களிடம் வரி வாங்கவில்லை என்றும் தங்களை புறக்கணிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை ஒதுக்கி வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவில் விழா குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பேட்டி மணிகண்டன் பாதிக்கப்பட்டவர்